ஆழியார் சுற்றுலா

posted in: Aliyar Tourism | 0

ஆழியார் சுற்றுலா

ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம் உள்ளன.

aliyar park1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது.

ஆழியார் அணையின் தோற்றம், கம்பீரம் மற்றும் அழகு காண்போர் மனதை கொள்ளை கொள்ளும். அணையின் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் உண்டு, பாதுகாப்பான படகு சவாரி செல்ல உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

அணையின் எதிரே உள்ள வண்ண மீன் காட்சியகமும், அதன் அருகே உள்ள மீன் வருவல் கடையும் காணதகுந்தவை.

இந்த அணையின் அருகாமையில், வால்பாறை செல்லும் சாலையில், சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன. குரங்கு அருவிக்கு செல்ல வனத்துறை சோதனைசாவடியில் அனுமதி பெறவேண்டும்.

Leave a Reply