குரங்கு அருவி

posted in: Aliyar Tourism | 1

குரங்கு அருவி குளியல்…

வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நிறைந்த இடமாக உள்ளது மங்கி பால்ஸ் (குரங்கு அருவி). குளிக்க ஏற்ற இடமாக உள்ள குரங்கு அருவியின் நீர், குளு குளுவென உள்ளதால் அனைவரும் குளிப்பது வழக்கம்.
monkey fallsகோடை காலங்களில் சில நேரம் தண்ணீர் இல்லாமல் அருவி வரண்டு போவதும் உண்டு. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் நீர் வரத்து குறைந்து காணப்படும்.
பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வாங்குவது அவசியம்.
இப்பகுதியில் உள்ள குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், மேலும் வழுக்கல் மற்றும் யானைகளின் நடமாட்டம் குறிந்து அறிந்துகொண்டு நடப்பது அவசியம். அருகில் உள்ள காடுகளுக்குள் செல்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

One Response

  1. குரங்கு அருவியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. குளிக்கலாம்.

Leave a Reply