The Aliyar Aquarium is currently the best aquarium in Coimbatore Dist. One of the most stunning places you can visit in the AliyarDam.Visiting the Aliyar Aquarium is, undoubtedly, one of the fun things to do in Aliyar, and with many different areas you can easily spend an entire day, like Aliyar Park, Aliyar Dam Boating and MonkeyFalls. Near by Aquarium, You can get fresh Fish Fry to taste.
வண்ண மீன் காட்சியகம்
சுற்றுலா தலமான ஆழியாரில் (Aliyar) உள்ள வண்ண மீன் அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியார் பூங்கா எதிரே மீன்வளத்துறை கட்டுபாட்டில் மீன் பண்ணை மற்றும் காட்சியகம் உள்ளது.
வால்பாறை மற்றும் ஆழியார் வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்து மகிழ்ந்து வருகின்றனா். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல லட்சம் செலவில் வண்ண மீன் காட்சியகம் புனரமைக்கப்பட்டது. காட்சியகத்தில் தனித்தனியாக கண்ணாடி தொட்டிகள் அமைக்கப்பட்டு இதில் தங்க மீன், பைட்டர் மீன், மஞ்சள், பழுப்பு நிற தங்க மீன்கள், தேவதை மீன்கள், டைகர் பர்ப், கெண்டை மீன் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் பராமாிக்கப்பட்டு வருகிறது.
இந்த காட்சியகத்தை குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர். தற்போது கோடை சீசன் காரணமாக வால்பாறை மற்றும் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் அதிகளவில் மீன் காட்சியகத்தையும் பார்த்து மகிழ்கின்றனர்.